புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு உற்பத்தி பாதிப்பு...

புவிசார் குறியீடு பெற்றுள்ள கொடைக்கானல் மலைப் பூண்டுவை, ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் அரசே கொள்முதல் செய்யுமாறு விவசாயிகள் கோரியுள்ளனர்.

Update: 2019-09-25 13:04 GMT
புவிசார் குறியீடு பெற்றுள்ள கொடைக்கானல் மலைப் பூண்டுவை, ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் அரசே கொள்முதல் செய்யுமாறு விவசாயிகள் கோரியுள்ளனர்.  வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், பழம்புத்தூர், பூண்டி, கிளாவரை உள்பட 15க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் விளைவிக்கப்படும் பூண்டு உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர், பூச்சிக்கொல்லி ஆகியவை  போதிய அளவில் கிடைக்காததால் மகசூல் குறைந்துள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். இதனால், கிலோ 350 ரூபாய் வரை விற்கும் நிலையும் கட்டுபடியாகவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்