ஆபத்தை உணராமல் பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் மாணவர்கள்
கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் தனியார் பேருந்தில் முட்லூர் முதல் புவனகிரி வரை மாணவர்கள் சிலர் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் தனியார் பேருந்தில் முட்லூர் முதல் புவனகிரி வரை மாணவர்கள் சிலர் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளன. பேருந்துக்குள் இடம் இருந்தாலும்பேருந்தின் பின்னால் பொருட்களை ஏற்ற பயன்படுத்தும் படிக்கட்டுகள் மீதும் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும் அவர்கள் பயணம் செய்வது தெளிவாக அதில் தெரிகிறது. இருந்த போதும், ஓட்டுநரும், நடத்துனரும், அவர்களை கண்டுகொள்ளாமல் பேருந்தை இயக்குவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.