விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்

லாபத்தில் இயங்கும் விமான நிலையங்களை தனியாருக்கு விற்க வேண்டும் என்று மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விமான நிலைய கூட்டு குழு சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2019-09-25 10:46 GMT
சென்னை

தனியார்மயமாக்குவதை கண்டித்து சென்னை விமான நிலைய ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  இன்று முதல் 27 ஆம் தேதி வரை போராட்டம் நடைபெற உள்ளதாகவும்,  ஊழியர்கள் சுழற்சி முறையில் தினமும் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர்.


கோவை 

கோவை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், அரசின் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். விமான நிலைய வாசலில்  கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், 27ஆம் தேதி வரை நடைபெற உள்ள போராட்டத்தால் விமான நிலைய சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி

சென்னைக்கு அடுத்து அதிக பயணிகளை கையாளும், திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் தொடர்  உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் காலை முதல் இரவு வரை சுழற்சி முறையில் ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளதால் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்