"திண்டுக்கல் மலைக்கோட்டையில் சுல்தான் பட ஷூட்டிங்கா?" : இந்து அமைப்பினர் எதிர்ப்பு - பெரும் பரபரப்பு
நடிகர் கார்த்தியின் புதிய படத்தின் படப்பிடிப்பை திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடத்த இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் உருவானது.
கார்த்தியின் புதிய படத்திற்கு சுல்தான் என பெயரிடப்படடுள்ளதாக கூறப்படுகிறது. திப்பு சுல்தான் பற்றிய கதை என்றும் சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெற்றது. இதனை அறிந்த பா.ஜ.க. - இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கோட்டையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மலைக்கோட்டையிலிருந்து படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு இந்து அமைப்பினர் கலைந்து சென்றதையடுத்து அப்பகுதியில் நிலவிய பதட்டம் தணிந்தது.