திருமணிமுத்தாற்றில் 3வது முறையாக வெள்ளப்பெருக்கு : தரைப்பாலம் உடைந்து, 4 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல் ராசிபுரம் அருகே உள்ள மதியம்பட்டியில் செல்லும் திருமணிமுத்தாற்றில், 3வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் உடைந்துள்ளது.

Update: 2019-09-24 10:12 GMT
நாமக்கல் ராசிபுரம் அருகே உள்ள மதியம்பட்டியில் செல்லும் திருமணிமுத்தாற்றில், 3வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் உடைந்துள்ளது. சேலம் சேர்வராயன் மலைகளில் பெய்யும் மழை நீரானது, மதியம்பட்டி வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது. தற்போது சேலம், நாமக்கல் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் திருமணிமுத்தாற்றில் 3வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தரைப்பாலம் உடைந்து, சுற்றியுள்ள 4 கிராமங்களுக்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுநீரும், மழைநீருடன் சேர்ந்து ஆற்றில் கலந்து வருவதால், இது விவசாயத்தை பாதிக்கும் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்