வட மாநிலங்களில் தொடரும் கனமழை : வெங்காயம் விலை கிடுகிடு ஏற்றம்

வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-09-24 03:41 GMT
கோவை மாவட்டம், பொள்ளாச்சி காந்தி சந்தையில் தினசரி 250 டன் வெங்காயம் வர்த்தகமாகும் நிலையில், இங்கிருந்து கேரள மாநில வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் வெங்காயம் தற்போது கிலோ 40 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால் சில்லரை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது வெங்காய விவசாயம் பாதித்துள்ளதால் 40 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது என்று வெங்காய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மழை தொடர்ந்தால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்