காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-11-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-11-09 00:58 GMT
  • காங்கிரஸ் கூட்டணி சக்கரங்கள், பிரேக் இல்லாத ஒரு வாகனம்.. மகாராஷ்டிரா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சனம்...
  • பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நசுக்க பார்ப்பதாக ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு.. நாட்டில் இன்று இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேதான் போட்டி நடப்பதாகவும் பேச்சு.... 
  • காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ எந்த சக்தியாலும் மீண்டும் கொண்டுவர முடியாது... மகாராஷ்டிரா பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்... 
  • திறமையற்ற அரசும், தவறான பொருளாதார கொள்கையும் நாட்டின் பொருளாதாரத்தை முடக்கிவிடும் என ராகுல்காந்தி விமர்சனம்.. 8 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கோள் காட்டி எக்ஸ் தளத்தில் பதிவு.. 
  • நீதித்துறையில் மிக அதிகமாக தாம் கேலி செய்யப்பட்டதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேச்சு... தம்மை கேலி செய்தவர்களுக்கு திங்கள்கிழமை முதல் வேலையில்லை என்றும் கலகலப்பு... 
  • தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமனம்... சத்ய பிரதா சாகு கால்நடைத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம்.. 
  • வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது.. வடகிழக்கு பருவமழையை தீவிரப்படுத்தும் என கணிப்பு... 
  • தமிழகத்தில் நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்... 
  • 90 ஆண்டுகளில் முதல் முறையாக தூர்வாரப்பட உள்ள மேட்டூர் அணை... சோதனை அடிப்படையில் அணையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தூர்வார நீர்வளத்துறை திட்டம்.. 
  • தமிழகத்தில் ஆவின் பால் விலையை உயர்த்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை.... தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தியுள்ள நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டவட்டம்....
  • தமிழக வெற்றிக் கழக மாநாட்டை நடத்த நிலம் வழங்கியவர்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்கிறார் நடிகர் விஜய்... சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருந்து அளித்து கெளரவிக்க உள்ளதாக தகவல்...
  • ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு கொண்டுவரப்பட்ட ஏழாயிரத்து 800 போதை மாத்திரைகள் பறிமுதல்.. மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருவதாக கோவை மாநகர காவல்துறை தகவல்.... 
  • அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாது என தகவல்.. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்..
Tags:    

மேலும் செய்திகள்