"பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு

மழைக்காலம் என்பதால் பள்ளிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-09-24 02:46 GMT
மழைக்காலம் என்பதால் பள்ளிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி வளாகங்கள் மழைநீர் தேங்கும் வகையில் இருக்கக் கூடாது எனவும், பள்ளமான பகுதிகள் இருந்தால் மண்ணை கொட்டி சமன் படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கம்பிகள் அறுந்து விழும் நிலையில் இருந்தால் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும் எனவும், பயன்படுத்த முடியாதபடியான வகுப்பறைகள் இருந்தால் அவற்றை பூட்டி வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி வளாகங்களில் திறந்த நிலையில் கிணறு அல்லது கழிவு நீர் தொட்டிகள் இருக்கக்கூடாது எனவும் மாணவர்களை வெந்நீர் குடிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்