அரசியலமைப்பு சட்டப்பிரிவு 371 ஐ நீக்கும் திட்டம் இல்லை - மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண்ரெட்டி கருத்து
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 371 ஐ நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷ்ண்ரெட்டி கூறினார்.
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்புச் சட்ட பிரிவு 370 ஐ நீக்கியதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற நிகழ்ச்சி ஓசூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் கிஷ்ண்ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீர் சிறப்புச் சட்டம் நீக்கியது தொடர்பாக நாடு முழுவதும் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களிடமும் இந்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறப்புச் சட்டப்பிரிவு 371 ஐ நீக்கப்படாது என்றும் கூறினார்.