குறைதீர்ப்பு முகாமில் வரிசையில் நின்ற எம்.எல்.ஏ.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார், குறைதீர் முகாமில் வரிசையில் நின்று மனு அளித்தார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார், குறைதீர் முகாமில் வரிசையில் நின்று மனு அளித்தார். பழனி எம்.எல்.ஏ. வான அவர் குடிநீர் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் குறைதீர் முகாமில் பங்கேற்று மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி குடிநீர் பிரச்சினை தீர்க்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.