பெண் தொழிலதிபர்களை குறி வைத்து மிரட்டல் : சேலம் இளைஞரை கைது செய்த தனிப்படை
பெண் தொழிலதிபர்களை குறி வைத்து, பணம் கேட்டு மிரட்டி வந்த சேலம் இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பெண் தொழிலதிபர் ஒருவர், பணம் கேட்டு தனக்கு மிரட்டல் வருவது தொடர்பாக, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமாரை சந்தித்து புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்க காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பெண் தொழிலதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பு எண்ணை டிராக் செய்த போலீசார், அந்த நபர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த நரேஷ் என்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், நரேஷை கைது செய்து விசாரணை நடத்தினர். முகநூலில் செல்போன் எண்களை சேகரித்து, அதன் மூலம் பல பெண்களை மிரட்டி பணம் பறித்து வந்ததை அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார். அந்த இளைஞரை திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, மிரட்டல் தொடர்பாக திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் மற்றொரு பெண் புகார் அளித்துள்ளர். இது சம்பந்தமாக திருப்பூரில் 2 வழக்குகளும், சேலத்தில் 3 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.