விக்ரம் லேண்டரில் என்ன நடந்தது? - சில நாட்களில் அறிக்கை வெளியாகும் என தகவல்
இஸ்ரோவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட் நாசிலில் பயன்படுத்தப்படும் கார்பன் பைபர் துணியானது பொள்ளாச்சி அருகே உள்ள குளத்துப்பாளையத்தில் தயாரிக்கப்படுகிறது ..
இஸ்ரோவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட் நாசிலில் பயன்படுத்தப்படும் கார்பன் பைபர் துணியானது பொள்ளாச்சி அருகே உள்ள குளத்துப்பாளையத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையை திருவனந்தபுரம் விக்ரம்சாராபாய் விண்வெளி ஆராய்ச்சிமையம் இயக்குனர்.சோமநாத் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நாளையுடன் முடிவடைய நிலையில், அதற்க்குள் விக்ரம்லேண்டரை தொடர்பு கொள்ள தீவிமுயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். விக்ரம்லேண்டர் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும், விக்ரம்லேண்டரில் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். விரைவில் அதன் அறிக்கை வெளியாகும் என்று அவர் கூறினார்.