ஏர்வாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முஸ்லீம்கள் போராட்டம் - 62 பேர் மீது வழக்குப்பதிவு
அராபத் நகரை சேர்ந்தவர் ரோஷன் பானு கணவரை பிரிந்து வாழும் இவர் மணி என்பவருடன் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தினருக்கு தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி, அராபத் நகரை சேர்ந்தவர் ரோஷன் பானு, கணவரை பிரிந்து வாழும் இவர் , மணி என்பவருடன் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தினருக்கு தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளார், இந்நிலையில் ரோஷன் பானு வீட்டிற்கு வந்த மணியை அக்கம்பக்கத்தினர் அடித்து ஏர்வாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து கணவரை அடித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரோஷன் பானு புகார் அளித்ததன் அடிப்படையில் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, இந்நிலையில் 200க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வழக்கை ரத்து செய்யக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர். தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட 62 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.