சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி முழு அடைப்பு போராட்டம்
சங்கரன்கோவிலை மையமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.
சங்கரன்கோவிலை மையமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.
தமிழக முதலமைச்சர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசியை மையமாகக் கொண்டு தனி மாவட்டமாக விதி எண் 110ன் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து தென்காசியை தனி மாவட்டமாக பிடிப்பதற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறது இந்த நிலையில் சங்கரன்கோவிலையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தை வணிகர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தும், 5000 க்கும் மேற்ப்பட்ட விசைத்தறி கூடங்களை மூடியும், இந்தப் போராட்டத்தில் வணிகர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 5000 பேர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.