காங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி
களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.
கரூர் மாவட்டம் களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை, பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து, சிறுவர்களுடன் விளையாடினார். இந்த குளத்தை, தூர்வாரும் பணிகளுக்காக, தனது 2 மாத சம்பள தொகையை ஜோதிமணி எம்.பி வழங்கினார், என்பது குறிப்பிடத்தக்கது.