அதிமுக பிரமுகர் கொலை வழக்கு : 5 பேருக்கு ஆயுள் தண்டனை

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

Update: 2019-09-13 22:09 GMT
அதிமுக பிரமுகர்  கொலை வழக்கில் 5 பேருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சென்னை மநகராட்சியின் மாமன்ற உறுப்பினராக இருந்த குருவிடம் மண்ணூர்பேட்டையை சேர்ந்த ஐந்து பேர், அந்த பகுதியில் உள்ள நிலத்தை விளையாட்டு மைதானமாக மாற்றி தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதற்கு குரு மறுப்பு தெரிவிக்க, அந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கடந்த 2015 ஆம் ஆண்டு குருவை வெட்டி கொலை செய்துள்ளனர்.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ஐந்தாயிரம்அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்