கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு : பிஜின் குட்டி, உதயகுமாருக்கு பிடிவாரண்ட் - நீதிபதி உத்தரவு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில், பிஜின் குட்டி, உதயகுமார்,ஆகிய இருவரை தவிர மீதமுள்ள 8 பேரும் ஆஜர் ஆகினர். பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, வழக்கில் ஆஜராகாத பிஜின் குட்டி, உதயகுமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டதுடன், மீதமுள்ள அனைவரும், வரும் அக்டோபர் நான்காம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.