பாப்பான்குளத்தில் ஆக்கிரமிப்புகள், ஆழ்துளை கிணறு அகற்றம் : ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை

பழனியை அடுத்த ஆயக்குடி பாப்பான் குளத்தில் முறைகேடாக மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்துறை அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2019-09-13 21:26 GMT
பழனியை அடுத்த ஆயக்குடி பாப்பான் குளத்தில் முறைகேடாக மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்துறை அதிகாரிகள் அகற்றினர். பாப்பான் குளத்தில் ஆயிரம் அடி ஆழத்திற்கு முறைகேடாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது குறித்து, சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து, திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவின் பேரில், குளத்தில் ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த கொய்யா மற்றும் இலவம் பஞ்சு மரங்களையும், ஆழ்துளை கிணற்றையும் வருவாய்துறை அதிகாரிகள் அகற்றினர். இதேபோல் அப்பகுதியில் உள்ள மற்ற நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்