சூர்யாவின் 'காப்பான்' படத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-09-12 22:40 GMT
'சரவெடி' என்ற தலைப்பில் தான் எழுதிய கதையை பயன்படுத்தி,  காப்பான் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்கு தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் கே.வி ஆனந்த் ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,  இரு கதைகளும் வெவ்வேறானவை என்றும், ஜான் சார்லஸை கே.வி. ஆனந்த் சந்தித்தது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி சதீஷ்குமார், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்