பச்சிளம் குழந்தையின் உடலில் ஊசி சிக்கிய விவகாரம் : மாவட்ட சுகாதாரப்பணி இயக்குனர், மருத்துவர்களிடம் விசாரணை

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தையின் உடலில் ஊசி சிக்கிய விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தினர்.

Update: 2019-09-12 22:18 GMT
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர். புரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி மலர்விழிக்கு கடந்த 20ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து, குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது. வீட்டிற்கு சென்ற பின்னர் குழந்தையின் உடலில் ஊசி முனை இருந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில்,  மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை மருத்துவ அலுவலரிடம் புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்திலும் பெற்றோர் புகார் அளித்தனர். இதனைதொடர்ந்து கோவை மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கிருஷ்ணா தலைமையிலான மருத்துவ குழுவினர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், குழந்தையை பார்வையிட்டு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விசாரணை நடத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்