போலி நகைகளை அடகு வைத்து ரூ.14.75 லட்சம் மோசடி - தனியார் அடகு நிறுவன மேலாளர் மீது புகார்
போலி நகைகளை அடகு வைத்து 14 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த தனியார் நகை அடகு நிறுவன மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை திருநகரில் இயங்கி வரும் பிரபல தனியார் நகை அடகு நிறுவனத்தில் 2017 ஆம் ஆண்டில் இருந்து மேலாளராக பணியாற்றி வந்தவர் சந்தனபாண்டி. இவர் பலமுறை போலி நகைகள், போலி ஆவணங்கள் மூலம் வெவ்வேறு பெயர்களில் அடகு வைத்து பணம் பெற்று வந்துள்ளார். அடமானமாக 764 கிராம போலி நகைகளை கணக்கில் காட்டிய அவர், சுமார் 14 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உதவி மேலாளர் அளித்த புகாரின் பேரில் , விசாரணை நடத்திய போலீசார், சந்தனபாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் காமராஜ், சூரியகலா, சுரேந்திரன் வெங்கடேஷ் பாபு மற்றும் சரவணன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தலைமறைவான அவர்களை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.