நிப்பான் நிறுவனம் சார்பில் 'அமுதசுரபி' திட்டம் துவக்கம் : வண்ணம் பூசும் தொழிலாளர்கள் பயனடைய நடவடிக்கை
வண்ணம் பூசும் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் நிப்பான் நிறுவனம் சார்பில் "அமுதசுரபி" என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
வண்ணம் பூசும் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் நிப்பான் நிறுவனம் சார்பில் "அமுதசுரபி" என்ற திட்டம் தொடங்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிப்பான் நிறுவனத்தின் உயரதிகாரிகள் மற்றும் சின்னத்திரை நடிகை வாணி போஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தின் மூலம் 45 ஆயிரம் வண்ணம் பூசும் தொழிலாளர்களின் குடும்பங்கள் பயன்பெறும் என நிப்பான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளில் நிப்பான் பெயிண்ட் வாங்கும் போது வண்ணம் பூசும் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அமுதசுரபி அட்டைக்கு பணம் வரவு வைக்கப்படும். 20 லிட்டர் முதல் பெயிண்ட் வாங்கினால் குறிப்பிட்ட தொகை அமுதசுரபி அட்டையில் செலுத்தப்படும் என்றும், இந்த தொகையை வைத்துக்கொண்டு, உணவகங்களில் பயன்படுத்துவதோடு மளிகை பொருட்களும் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.