அண்ணா, கருணாநிதி குறித்த புத்தக வெளியீட்டு விழா - தனியார் திருமண மண்டபம் இடம் தர மறுப்பதாக குற்றச்சாட்டு
ஆரணியில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும கருணாநிதி குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு இடம் தர தனியார் திருமணம் மண்டப நிர்வாகம மறுத்துள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும கருணாநிதி குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு இடம் தர தனியார் திருமணம் மண்டப நிர்வாகம மறுத்துள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது. ஆரணி "ழ" புத்தகம் என்ற அமைப்பு சார்பில் வரும் 7-ஆம் தேதி புத்தக வெளியீட்டு விழா நடைபெறுவதாக இருந்தது. இதற்காக அழைப்பிதழும் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சிக்காக முன்பதிவு செய்யப்பட்ட தனியார் மண்டபம் நிர்வாகம், தற்போது இடம் தர மறுத்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.