வழக்கு விசாரணையின்போது ஆஜராகவில்லை என்றால் கடும் நடவடிக்கை - காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

வழக்கு விசாரணையின் போது ஆஜராகவில்லை என்றால் காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-09-05 23:44 GMT
வழக்கு விசாரணையின் போது ஆஜராகவில்லை என்றால் காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் ஆஜராகாததால், டிஜிபி மற்றும் காவல் ஆணையர் வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த உத்தரவை மறுபரிசிலனை செய்ய கோரி நீதிபதி வேல்முருகனிடம், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் முறையிட்டார். இதனை ஏற்று கொண்ட நீதிபதி, டிஜிபி மற்றும் காவல் ஆணையர் நேரில் ஆஜராக விலக்களித்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்