அரசு பேருந்தில் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு
அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடத்துனரின் மரணத்திற்கு காரணமான காவலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடத்துனரின் மரணத்திற்கு காரணமான காவலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த, மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன், உயிரிழந்த நடத்துனரின் குடுமபத்தினருக்கு இழப்பீடு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விழுப்புரம் கோட்ட நிர்வாக இயக்குனர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.