குன்னூர் மலை ரயிலில் ஓணம் திருவிழா கொண்டாட்டம்
குன்னூர் மலை ரயிலில் ஓணம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
குன்னூர் மலை ரயிலில் ஓணம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.வரும், 11ஆம் தேதி ஓணம் திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள், குன்னுார் ரயில்வே நிலையத்தில் இறங்கி, அங்கு அமைக்கப்பட்டிருந்த பூக்கோலத்தை பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அங்கிருந்த ஊழியர்கள் ஒரே வண்ண உடையும், கேரள மாநிலத்தின் வேட்டியும் அணிந்து சுற்றுலா பயணிகளை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து ஓண சத்யா விருந்து வழங்கப்பட்டது.