"புதிய 5 மாவட்டம் : பா.ம.க. கோரிக்கை வைத்தவை" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பெருமிதம்

விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக உருவாக்க காரணமாக இருந்த பா.ம.க.நிறுவனர் ராமதாஸுக்கு கள்ளக்குறிச்சியில் பாராட்டு பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2019-09-01 22:50 GMT
விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக உருவாக்க காரணமாக இருந்த பா.ம.க.நிறுவனர் ராமதாஸுக்கு  கள்ளக்குறிச்சியில் பாராட்டு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய பா.ம.க.நிறுவனர் ராமதாஸ்,  தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ள புதிய 6 மாவட்டங்களில்  5 பா.ம.க. கோரிக்கை வைத்த மாவட்டம் என்றார். 
அதேபோல பா.ம.க.வின் நீண்ட நாள் கோரிக்கையான பூரண மதுவிலக்கு மாநிலமாக தமிழ்நாட்டை அறிவிக்க தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பா.ம.க.வை விமர்சிப்பவர்களை பற்றி தொண்டர்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டாம் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்