பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை
தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன், பாஜகவின் மாநிலத் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.
தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன், பாஜகவின் மாநிலத் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகியுள்ளார். தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அவர், மாநில தலைமை அலுவலகத்துக்குச் சென்று அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர், அலுவலக செயலாளர் கேசவ விநாயகத்திடம் தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் தமிழிசை விலகியுள்ளார்.