செப். 3ஆம் தேதி வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் : மோட்டார் வாகன திருத்தச் சட்டம், லோக் அதாலத்திற்கு எதிர்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்குழுவின் தலைவர் நந்தகுமார், மோட்டார் வாகன சட்டத் திருத்தம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து வரும் 3ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதில், சென்னை, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தவிர, 45 ஆயிரம் பேர் இதில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.