தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் : 15 ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் துவங்கும்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின், 15 ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் தொடங்கும் என ஒரு நபர் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின், 15 ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் தொடங்கும் என ஒரு நபர் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம், கடந்த 27 ஆம் தேதி விசாரணையை துவக்கியது. இதுவரை 14 கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு மருத்துவர் உட்பட 379 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. 28 பேருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. மேலும் 15 ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் தொடங்கும் என ஒருநபர் விசாரணை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.