பழனி பஞ்சாமிர்த கடைகளில் 2வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை
பழனியில், பிரபல பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்பு நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில், 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
பஞ்சாமிர்த தயாரிப்பில் புகழ்பெற்ற பிரபல தொழில் நிறுவனங்களை தற்காலிகமாக மூடி வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். 2-வது நாளாக இன்றைய தினமும் அதிகாரிகள் சோதனை தொடர்கிறது. 55 அதிகாரிகள் கொண்ட குழு அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாமிர்தம் தயாரிக்க வாங்கும் பொருட்கள், விற்கப்படும் பஞ்சாமிர்தம் ஆகியவற்றுக்கான வரவு-செலவு கணக்குகள், அவற்றுக்கு ஜி.எஸ்.டி கட்டப்படுகிறதா என அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து வருகின்றனர். சுமார் 20 மணி நேரத்திற்கு மேலாக தொடரும், இந்த சோதனையில், நகை, பணம், பத்திரம் மற்றும் ஆவணங்கள் ஏதும் சிக்கியுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சோதனை முடிந்த பிறகே இந்த விவகாரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.