7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநரை வற்புறுத்த முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை வற்புறுத்த முடியாது என்றும், அவரே நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை வற்புறுத்த முடியாது என்றும், அவரே நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயபுரம் பகுதி, கிழக்கு மாதா கோவில் தெருவில், 30 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட நடைபாதை வசதியை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு என்றும் கூறினார்.