கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

கோவை உக்கடம், கரும்புக்கடை, பிலால்நகர், கோட்டை மேடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் காலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்தி வந்த விசாரணை நிறைவு பெற்றது.

Update: 2019-08-29 10:51 GMT
ஐஎஸ்ஐஎஸ்  தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி கோவையில், உமர் பாரூக், சனாபர் அலி, சமேஷா முபின், முகமது யாசீர் , சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் காலை 5 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவை, உக்கடம், கோட்டைமேடு பகுதிகளில் இந்த சோதனை 5 மணி நேரம் நடைபெற்றது. சோதனையின் நிறைவாக, 5 பேரின் வீடுகளில் இருத்து தமிழ், உருது, அரபு மொழி புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், வங்கி கணக்கு ஆவணங்கள், 7 செல்போன்கள், பென் டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, உமர் பாரூக், ஷனாபர் அலி, முபின், முகமது யாசிப், சதாம் உசேன் ஆகிய 5 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்