கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு : நன்றி தெரிவித்த நெசவாளர் சங்கத்தினர்
காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதற்கு நெசவாளர் சங்கத்தினர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதற்கு நெசவாளர் சங்கத்தினர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் 700க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் கைவண்ணத்தில் உருவாகும் செட்டிநாடு கண்டாங்கி சேலை உலக பிரசித்தி பெற்றது. இந்த நிலையில் இந்த சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால் நெசவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.