அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டு அருகே உள்ள புதரில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் நீண்ட நேரம் கேட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டு அருகே உள்ள புதரில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் நீண்ட நேரம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் தேடிய பொது மக்கள் அந்த பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு காவல் உதவி மையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சிகிச்சைக்காக அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிறந்ததற்கான அடையாள அட்டை குழந்தையின் கையில் கட்டப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தையை அனாதையாக விட்டுச் சென்ற பெண் யார்? அல்லது குழந்தை கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.