"காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சம்பா நெல் சாகுபடிக்கு காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-08-28 13:12 GMT
சம்பா நெல் சாகுபடிக்கு காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 15 நாட்களாகியும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்று ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் மேட்டூர் அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடிக்கு பதிலாக 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்றும் ராதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் காவிரி கிளை ஆறுகளை முறையாக தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்