குலகேசகரமுடையார் கோவிலில் காணாமல் போன நடராஜர் சிலை ஆஸி.யில் இருந்து இம்மாத இறுதிக்குள் இந்தியா கொண்டு வரவாய்ப்பு

நெல்லை அறம்வளர்த்த நாயகி குலகேசகரமுடையார் கோவிலில் காணாமல் சிலை தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Update: 2019-08-24 18:32 GMT
கடந்த 1982 ஆம் அண்டு 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடராஜர் ,சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் மற்றும் ஸ்ரீபலி நாதர் ஆகிய சிலைகள் காணாமல் போயின. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த  3 மாதங்களுக்கு முன்பு கோவில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்மணிக்கவேல் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் 75 புள்ளி 7 அங்குலம்  உயரமுள்ள கோவிலுக்கு சொந்தமான நடராஜர் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  பின்னர் மத்திய அரசின் உயர்மட்டகுழு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் இம்மாத இறுதிக்குள் சிலை இந்தியா கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்