கழிவுநீரை உறிஞ்சு குழாய் அமைத்து அகற்ற நடவடிக்கை - தந்தி டிவி செய்தி எதிரொலி

தந்தி டிவி செய்தி எதிரொலியாக, சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கிராமத்தில் கழிவுநீரை உறிஞ்சு குழாய் அமைத்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Update: 2019-08-21 21:02 GMT
ஓமலூர் அருகேயுள்ள சிக்கம்பட்டி கிராமத்தில் பெரியகாடம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இங்கு கிராம ஊராட்சி சார்பில் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் முறையாக செய்யப்பட்டு வந்தது. இங்கு பொதுப்பணித்துறை சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.

ஆனால், புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாயில் முறையாக கழிவுநீர் செல்லாமல் ஆங்காங்கே தடைபட்டு தேங்கி நிற்கிறது. இதனால், கொசுத்தொல்லையும், துர்நாற்றமும் வீசுகிறது. இதுகுறித்து தந்தி டிவியில்  கடந்த ஜூன் மாதம்  செய்தி வெளியானது. 

இதனை தொடர்ந்து தற்போது கழிவுநீரை வெளியேற்றும் வகையில் உறுஞ்சி குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்