தமிழகம் முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டம்

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

Update: 2019-08-15 09:22 GMT
சென்னை உயர் நீதிமன்றம் 

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  தலைமை நீதிபதி விஜய கம்லேஷ் தஹில் ரமானி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் சட்ட அமைச்சர் சிவி.சண்முகம், உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள்,  டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

மதுரை உயர் நீதிமன்ற கிளை

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை கிளையின் நிர்வாக நீதிபதி சத்யநாராயணன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். விழாவில், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின்   வீர, தீர நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சென்னை விமான நிலையம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்​ பன்னாட்டு முனையத்தில்  நடைபெற் நிகழ்ச்சியில், விமான நிலைய இயக்குனர் ஸ்ரீகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மத்திய தொழிற்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

சென்னை துறைமுகம்

சென்னை துறைமுக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்