ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கிடக்கும் கழிவுகளை அகற்ற கோரிக்கை

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கிடக்கும் கழிவுகளை அகற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-08-10 12:51 GMT
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கிடக்கும் கழிவுகளை அகற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கு, முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, பானைகளை உடைத்து காரியம் செய்வது, குளிக்கும்போது துணிகளை வீசுவது போன்றவை பக்தர்களின் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், அக்னி தீர்த்த கடல், திடீரென 100 அடி அளவுக்கு உள் வாங்கியது. இதனால், கடலுக்குள் இருந்த துணிக் கழிவுகள், சிதிலமடைந்த சிலைகள், உடைந்த ஓடுகள், பாறை படிமங்கள் ஆகியவை வெளியே தெரிந்தது. ரசிப்புடன் கடலில் குளிக்கும் பக்தர்கள், கழிவுகள் மிதந்த காட்சியை பார்த்து முகம் சுழித்தனர். அவற்றை விரைந்து அகற்றுமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்