கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு : தமிழகத்துக்கு நீர் திறப்பு 2 லட்சமாக உயர்வு

கனமழை எதிரொலியால், கர்நாடகாவில் இருந்து ஏற்கனவே ஒன்றரை லட்சம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், கே.ஆர்.எஸ். அணையில் வெறியேற்றப்படும் நீரை ஐம்பதாயிரம் கனஅடியாக உயர்த்தப்பட உள்ளது.

Update: 2019-08-10 11:35 GMT
கனமழை எதிரொலியால், கர்நாடகாவில் இருந்து ஏற்கனவே ஒன்றரை லட்சம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், கே.ஆர்.எஸ். அணையில் வெறியேற்றப்படும் நீரை ஐம்பதாயிரம் கனஅடியாக உயர்த்தப்பட உள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதனால், ஏற்கனவே திறக்கப்படும் 25 ஆயிரம் கனஅடியை 50 ஆயிரம் கனஅடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, கபினியில் இருந்து ஒன்றரை லட்சம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டால், தமிழகத்துக்கு நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக உயரஉள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்