முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொல்லப்பட்ட விவகாரம் - கொலையாளியிடம் போலீசார் தீவிர விசாரணை

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி ஐஜி தலைமையில் கொலை நடந்த வீட்டில் சோதனை நடைபெற்றது.

Update: 2019-08-09 11:45 GMT
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய மூவரும் கடந்த 23 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திமுக பிரமுகரான சீனியம்மாளின் மகன் கார்த்திக் ராஜா கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கார்த்திக் ராஜாவை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவரிடம் 3 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையிலான குழுவினர் கொலை நடைபெற்ற வீட்டில் ஆய்வு நடத்தினர். விசாரணை நிறைவடைந்த பின்பு அதன் அடிப்படையில் கிடைக்கும் தகவலை கொண்டு சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளவும் சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்