தொழிலதிபர் கொலை வழக்கு - பெண் வழக்கறிஞர் கைது
சென்னை அடையாறில் தொழிலதிபர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வழக்கறிஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அடையாறை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜ், 65 லட்சம் ரூபாய் பணத்திற்கு கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, தொழிலதிபரின் செல்போன் எண்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் பிரபல ரவுடிகளான குடுமி பிரகாஷ் உடன் சுரேஷ், மனோகர், ராஜா, சதீஷ், சந்துரு ஆகிய 6 பேரையும் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ப்ரீத்தாவை, தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக தலைமறைவாக இருந்த ப்ரீத்தாவையும் அடையாறு போலீசார் கைது செய்தனர்.