களைகட்டிய வன பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா : படுகர் பெண்களின் பாரம்பரிய நடனம்... வான வேடிக்கை...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில், வான வேடிக்கை, பெண்கள் நடனம் ஆகியவற்றுடன் வன பத்ர காளியம்மன் கோயில் திருவிழா களைகட்டியது.

Update: 2019-08-02 02:17 GMT
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில், வான வேடிக்கை, பெண்கள் நடனம் ஆகியவற்றுடன் வன பத்ர காளியம்மன் கோயில் திருவிழா களைகட்டியது. கடந்த 23ம் தேதி தொடங்கிய திருவிழாவின் 10ஆம் நாளை முன்னிட்டு, இசை வாத்தியங்களுடன் குதிரை வாகனத்தில் அம்மன் பரிவேட்டைக்கு புறப்படும் வீதியுலா நடத்தப்பட்டது. இதன் ஒருபகுதியாக, படுகர் இன பெண்கள், பாரம்பரிய பாடல் பாடி, நடனம் ஆடினர். ஆண்கள், மேளதாளத்துடன் அம்மன் பாடல் பாடி அசத்தினர். இதைத் தொடர்ந்து, வானிலிருந்து உதிர்வது, செடியில் இருந்து கொட்டுவது என பல்வேறு வகையான, வியக்க வைக்கும் வான வேடிக்கைகள் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்