பர்வத வர்த்தினியின் தங்க குதிரை வீதியுலா : ஆடி திருக்கல்யாணத்தின் 8ஆம் நாள் வைபவம்

ஆடி திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்பாள் தங்க குதிரை வாகன வீதியுலாவில் ஏராளமானோர் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2019-08-02 02:13 GMT
ஆடி திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்பாள் தங்க குதிரை வாகன வீதியுலாவில் ஏராளமானோர் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 8ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு, தங்க குதிரை வாகனத்தில் அம்பாள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, ஆங்காங்கே பக்தர்கள் அர்ச்சனை செய்து, வழிபட்டனர். மண்டகப்படிகள் நிறைவுடன், அம்பாள் ஊர்வலம், மீண்டும் கோயிலுக்குள் சென்றது. 
Tags:    

மேலும் செய்திகள்