" காபி-டே" அதிபர் சித்தார்த் தற்கொலையா?

பாஜக மூத்த தலைவர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனும், காபி-டே என்ற பிரபல நிறுவனத்தின் அதிபருமான சித்தார்த், திடீரென மாயமாகி விட்டார்.

Update: 2019-07-30 20:25 GMT
பாஜக மூத்த தலைவர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனும், காபி-டே என்ற பிரபல நிறுவனத்தின் அதிபருமான சித்தார்த், திடீரென மாயமாகி விட்டார். தொழிலில் நஷ்டம் மற்றும் கடன் தொல்லை காரணமாக, நேத்ராவதி நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு குழுவினர், அதிகாலை 1.30 மணி முதல் தொடர்ந்து, 20 மணி நேரத்திற்கும் மேலாக, தேடுதல் பணியில் ஈடுபட்டனர். காபி-டே அதிபர் சித்தார்த் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய கர்நாடக போலீசார், தாம் மாயமானதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். எனவே, காபி-டே அதிபர் சித்தார்த் விவகாரம், கர்நாடக மாநிலத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்