பாடப்புத்தகங்களில் தவறுகளை கண்டுபிடிப்பதற்காக பள்ளிகளுக்கு சென்று நேரில் பார்வையிடுங்கள் - ஆசிரியர் பயிற்சி முதல்வர்களுக்கு உத்தரவு

பாடப்புத்தகங்களில் தவறுகளை கண்டுபிடிப்பதற்காக மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் வகுப்புகளுக்குச் சென்று ஆசிரியர் பயிற்சி முதல்வர்கள் பார்வையிட வேண்டும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2019-07-30 08:14 GMT
பாடப்புத்தகங்களில் தொடர்ச்சியாக பல்வேறு குளறுபடிகளும், தவறுகளும் வெளிவந்த வண்ணம் இருப்பதால், தவறுகளை கண்டுபிடிப்பதற்காக , மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் வகுப்புகளுக்குச் சென்று , ஆசிரியர் பயிற்சி முதல்வர்கள் பார்வையிட வேண்டும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தவறுகளை சுட்டிக்காட்டி உடனுக்குடன் இயக்குனர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டு முழுவதும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு,அடுத்த கல்வியாண்டுக்காக அச்சிடப்படும் பாடப் புத்தகங்களில் பிழைகள் அனைத்தும்  சரி செய்யப்படும் என்று இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்