மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 46 புள்ளி 49 அடியாக உள்ளது. நீர் இருப்பு 15 புள்ளி 67 டி.எம்.சி.யாக உள்ளது. வினாடிக்கு அணைக்கு எட்டாயிரத்து 900 கனஅடி நீர் வரும் நிலையில், அணையில் இருந்து ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்றை விட இன்று கூடுதலாக 500 கனஅடிநீர் வந்து கொண்டு இருக்கிறது.