முதுகுளத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து 3 சிறுவர்கள் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து சிதறியதில் 3 சிறுவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Update: 2019-07-29 02:13 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து சிதறியதில், 3 சிறுவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.நேற்று ஆத்திகுளம் கண்மாய் பகுதிக்கு சென்ற 3 சிறுவர்கள், அங்கு கிடந்த சிறிய பந்து போன்ற பொருளை எடுத்து  விளையாடி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பொருள் வெடித்து சிதறியதுடன், அதேபோன்ற மேலும் 2 பொருட்களும் வெடித்துள்ளன. இந்த சம்பவத்தில் லேசான தீக்காயம் அடைந்த 3 சிறுவர்களையும், அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்தை நேரில் ஆய்வுசெய்த முதுகுளத்தூர் டிஎஸ்பி ராஜேஷ், வெடித்து சிதறிய மர்மபொருள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்