காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு பெய்த கனமழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2019-07-29 01:55 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு பெய்த கனமழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அ​ங்கு காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில்,  இரவு 7.30 மணியளவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. காஞ்சிபுரம், ஒரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத், பாலுசெட்டிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த திடீர் மழையால், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்தி வரதரை காண வந்த பக்தர்கள்,  கொட்டும் மழையையும் ​பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செயதனர்.

மாமல்லபுரத்தில் பலத்த காற்றுடன் கனமழை : 


காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் சுமார் 2 மணிநேரத்திற்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் சாலையில் சென்ற வாகனங்கள், முகப்பு விளக்குகளை எரியவிட்டு, மெதுவாக ஊர்ந்து சென்றன.
Tags:    

மேலும் செய்திகள்